பிரபல நடிகைக்கு ஐபிஎல் டிக்கெட் வாங்கி தந்த விஜய்...

 யார் அந்த நடிகை.?

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய்

அரசியலில் பிரவேசமாகியிருக்கும் அவர் தான் ஒப்புக்கொண்டுள்ள படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கோட்' படம் இறுதி கட்டத்தை நோக்கு முன்னேறி வருகிறது

கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 'தளபதி 69' படத்தினை இயக்குவது யார் என்பது குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் விஜய் தனக்கு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி தந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

அப்படி விஜய் யாருக்கு டிக்கெட் வாங்கி குடுத்தாருனு யோசிக்கிறீங்களா.?

சமீபத்தில் அந்த நடிகையின் நிச்சயதார்த்தம் குறித்து கூட அதிக பதிவுகள் இணையதளத்தில் வெளியானதுடன் நெட்டிசன்களும் பலவாறு கமெண்ட் செய்திருந்தனர்

கண்டுபிடிச்சுட்டிங்களா... அவங்களே தான். நடிகை வரலட்சுமிக்கு தான் நடிகர் விஜய் ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார்

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், “நான் பார்த்த முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளின் டிக்கெட் வாங்கி கொடுத்ததே தளபதி விஜய் தான்” எனக் கூறியுள்ளார்

தற்போது இந்த தகவல் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது

next

டிரான்ஸ்பரன்ட் உடையில் ஜொலிக்கும் ஜான்வி கபூர்.!