பிரைவேட் ஜெட் வாங்கும் குக் வித் கோமாளி பிரபலம்.!

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் துறையில் பயணித்து, இன்று மிகப்பெரிய சமையல் கலைஞராகவும், தனக்கென ஒரு சொந்த கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வரும் பிரபலம் தான் மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் மிகச் சிறந்த சமையல் கலைஞர்களாக திகழ்ந்தவர்கள்

பொறியியல் படித்திருந்தாலும் சிறு வயது முதலே சமையல் மீது இவர் அதிக ஆர்வம் கொண்டவாராக இருந்தார்

இதனால், கேட்டரிங் நிறுவனத்தை தொடங்கிய மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது அதை மிகப்பெரிய நிறுவனமாக முன்னேற்றியுள்ளார்

நடிகராகவும், நடுவராகவும் பயணித்துவரும் மாதம்பட்டி ரங்கராஜ் கார்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவராக விளங்கி வருகிறார்

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னிடம் உள்ள கார்களை குறித்து மனம் திறந்துள்ளார்

அதன்படி அவர் முதலில் வாங்கிய கார் டாடா இண்டிகா. அப்போது அதன் விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் ஆகும்

இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிய கார் போர்ட் நிறுவனத்தின் எண்டோவர். இதன் விலை சுமார் 34 லட்சம் ரூபாயாகும்

அதன்பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் ஜாகுவார் நிறுவனத்தின் XF காரை வாங்கினார். அதனுடைய விலை சுமார் 65 லட்சம்

இதனைத் தொடர்ந்து இவர் bmw x3 காரை வாங்கினார். இதன் விலை சுமார் 92 லட்சம்

இதையடுத்து வோல்வோ நிறுவனத்தின் வி40 என்கின்ற ஒரு காரையும் அவர் வாங்கினார். அதன் விலை சுமார் 30 லட்சம் ஆகும்

மேலும் பென்ஸ் சிஎல்ஏ 200டி என்ற காரை அவர் வைத்திருக்கிறார். இதன் விலை சுமார் 40 லட்சம் ரூபாயாகும்

இந்த வரிசையில், அவர் அடுத்து வாங்கியது போர்ஸ் நிறுவனத்தின் மகான் காரை தான். அதனுடைய விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்

அதே போல ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரையும் அவர் வைத்திருக்கிறார். அதன் விலை சுமார் ரூ.3 கோடி

இவையெல்லாம் இல்லாமல் தற்பொழுது வாடகைக்கு ஹெலிகாப்டர் வாங்கி அவ்வப்போது பயணித்துக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் தனக்கென சொந்தமாக ஒரு பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்க ஆவணம் செய்து வருவதாக கூறியிருக்கிறார்

next

பிரபல நடிகைக்கு ஐபிஎல் டிக்கெட் வாங்கி தந்த விஜய்… யார் அந்த நடிகை.?