சதுரகிரி மலையின் பெயர் காரணம் தெரியுமா.? மலைக்கு பின்னால் இருக்கும் கதை இது தான்.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பக்தர்கள் எட்டு நாட்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில், ஒவ்வொரு முறை அனுமதி வழங்கப்படும் போதெல்லாம் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இந்த மலையை உள்ளூர் மக்கள் இங்குள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்க கோவில்களை கருத்தில் கொண்டு மகாலிங்க மலை என்று அழைப்பார்கள்

எனினும் இதற்கு சதுரகிரி என்ற பெயர் எப்படி வந்தது என்றால் 'சதுர் என்றால் நான்கு', 'கிரி என்றால் மலை' ஆகும். திசைக்கு நான்கு மலைகள் வீதம் சுற்றிலும் 16 மலைகள் அமையப்பெற்ற இடம் என்பதால் சதுரகிரி மலை என பெயர் பெற்றது

சித்தர்களின் பூமி, இன்றளவும் சித்தர்கள் உயிரோடு இருப்பதாக நம்பப்படும் இந்த மலையின் வரலாறு புராண கதையாக கூறப்படுகிறது

முன்னொரு காலத்தில் மலைக்கு கீழ் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பச்சைமால் என்பவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்

அவரது மனைவி சடைமங்கை தினமும் பால் விற்பனை செய்து வரும் போது ஒரு நாள் துறவி ஒருவர் அவளிடம் பால் கேட்க அவளும், துறவிக்கு கணவருக்கு தெரியாமல் தினமும் பால் கொடுத்து வந்தாள்

ஏசி கேஸ் கசிவு ஏன் நடக்கிறது? முன்பே தடுப்பதற்கான கைட்லைன்ஸ்...

வெயில் பற்றி கவலையில்லை... வந்தாச்சு பாக்கெட் ஏசி புதிய வெர்ஷன்!

ஃப்ரிட்ஜை ஏசியாக மாற்றி பயன்படுத்த முடியுமா..?

More Stories.

தெய்வமான மனைவியின் பிரிவால் வாடிய பச்சைமால் அதற்கு பிராயச்சித்தமாக சதுரகிரி மலையில் உள்ள ரிஷிகளுக்கு பால் கொடுத்து வந்துள்ளார்

அப்போதும் சதுரகிரி மலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாட்டில் மட்டும் தினமும் பால் குறைந்தது, பச்சைமால் மாட்டினை பின்தொடர்ந்து சென்று பார்த்த போது, மேய்ந்து கொண்டிருந்த மாடு தீடீரென ஒரு புதருக்குள் செல்லவும் மடுவில் இருந்து பால் தானாக புதருக்குள் விழ தொடங்கியது

பச்சைமால் கோபம் கொண்டு புதருக்குள் யாரோ இருப்பதாக எண்ணி குச்சியை கொண்டு அடித்தார். புதருக்குள் சென்று பார்த்த போது உள்ளே லிங்கம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைய சிவபெருமான் பச்சைமாலுக்கு காட்சி தந்தார்

அவர் தேவலோகத்தில் இருந்த யாழ் வல்ல தேவன் என்றும் சாபம் காரணமாக பச்சைமாலாக வாழ்ந்து வந்ததாகவும், சாப விமோசனம் தரவே இந்த திருவிளையாடல் என்றும் விளக்கி அவரை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்

பின்னர் சதுரகிரி மலையில் உள்ள ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த மலையிலேயே அவர் சுந்தர மகாலிங்கமாக தங்கி விட்டதாக கூறப்படுகிறது

next

வெயில் கொளுத்தினாலும் ஒரு நன்மை இருக்கு மக்களே.!