இனி ராமநாதசுவாமி கோவிலில் நிம்மதியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் தீர்த்தங்களில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் போக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது

இந்த ஐதீகத்தால் தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்

தற்போது கோடை வெயில் தமிழகத்தினை கடுமையாக தாக்கி வருவதைப் போல ராமநாதபுரம் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது

இதனால் ராமேஸ்வரம் வரும் ஆன்மீக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெயிலில் அவதி அடையாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது

அதன்படி ராமநாதசுவாமி கோவிலில் உள்ள கிழக்கு கோபுர வாசல் பகுதியில் 300 மீட்டர் தூரத்திற்கு பசுமை பந்தல் அமைத்துள்ளனர்

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த பசுமை பந்தலால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வெயில் சிரமம் அடையாமல் சுவாமி தரிசனம் செய்து நகராட்சியை பாராட்டினர்

next

கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!