இந்த கொழு கொழு குழந்தை எந்த பிரபல நடிகை என்று தெரிகிறதா.?

வளர்ந்து வரும் பிரபல நடிகை ஒருவரின் அழகிய குழந்தை வயது போட்டோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது

யார் இந்த நடிகையாக இருக்கும் என பலரும் தேடி வருகின்றனர்

இந்தி, தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் இவர்

கவர்ந்திழுக்கும் அழகு, மனதை கவரும் சிரிப்பு, சிறப்பான நடிப்பு என தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்துள்ளார் இந்த நடிகை

இந்தி சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இந்த நடிகை அதன் பின் பாலிவுட்டில் கால் பதித்தார்

தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக மவுசு கொண்ட நடிகையாக இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது

'சீதா ராமம்' படத்தில் தொடங்கி ஹாய் நானா, பேமிலி ஸ்டார் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வரும் இந்த அழகிய குழந்தை எந்த பிரபல நடிகைன்னு கண்டுபிடிச்சீங்களா.?

வளர்ந்து வரும் பிரபல நடிகை மிருணாள் தாகூர் தான் போட்டோவில் இருக்கும் இந்த அழகிய கொழு கொழு குழந்தை

அட மிருணாள் தாகூரா இந்த குழந்தை என ரசிகர்கள் இந்த போட்டோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

next

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லை… இவங்கதான்.!