நடிகர் சூரியின் Twin தம்பியை பாத்துருக்கீங்களா.?

வைரல் போட்டோ.!

தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் மறுமலர்ச்சி, ரெட், வின்னர் உள்ளிட்ட படங்களில்  கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகர் சூரி. மக்களின் கவனம் இவரின் பக்கம் திரும்பாமலே இருந்தது

அதன் பின் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சூரிக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. மேலும் படத்தில் சூரியின் புரோட்டா காமெடி மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது

இதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற சூரி,  நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, சூர்யா போன்ற முன்ணனி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க தொடங்கினார். இவருக்கான ரசிகர் பட்டாளம் பெருகியது

நகைச்சுவை நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாடத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். படத்தில் சூரியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது

மேலும் விடுதலை படத்தின் 2 ஆம் பாகத்திற்காக மக்கள் காத்திருக்கின்றனர். மேலும், சூரி நடித்துள்ள கருடன் படம் விரைவில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் நடிகர் சூரியின் சகோதரர் குறித்து பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

மதுரையை சேர்ந்த சூரிக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் மற்றும் தம்பி உள்ளானர். இதில் சூரியும் அவரது தம்பி ராமும் ஒன்றாய் பிறந்த இரட்டை சகோதரர்கள்

சினிமாவுக்காக தனது பெயரை சூரி என்று மாற்றிக்கொண்ட சூரியின் பெயர் ராம் அவரது தம்பியின் பெயர் லட்சுமணன்

சில மாதங்களுக்கு முன்பு தனது தம்பியின் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு தனது X பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சூரியின் தம்பி லட்சுமணன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது

next

சமந்தா இடத்தை தட்டிதூக்கிய இளம் நடிகை… யார் தெரியுமா.?