பந்தல் காய்கறிகள் தான் இப்ப ட்ரெண்ட்... லாபம் மட்டும் இவ்வளவா.?

விவசாயிகள் பெரும்பாலும் நெல், கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில் சில விவசாயிகள் தினந்தோறும் லாபம் தரும் புடலை, பீர்க்கை, கோவைக்காய் போன்ற பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்

அதில் சரியான முறையில் பயிர் செய்து பந்தல் அமைத்து அதிக அளவில் மகசூல் பெறுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

தென்னை, கரும்பு, வாழை என பணப் பயிரை சாகுபடி செய்வோருக்கு ஆண்டுக்கு ஒருமுறை பலன் கிடைக்கும். அதுவும், மழையின் கருணை இருந்தால் தான் சாத்தியமாகும்

சிறு, குறு விவசாயிகள் அல்லது அன்றாடம் வருவாய் ஈட்டும் தேவையுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது இந்த பந்தல் காய்கறி சாகுபடி

பந்தல் காய்கறிகளை கோடைகாலம், மழைக்காலம் என இரு காலங்களிலும் சாகுபடி செய்யலாம். எனினும், வெப்பம் குறைவாக இருப்பது நல்லது. ஜூலை, ஜனவரி மாதங்களில் நாற்று படரும். ஹெக்டேருக்கு 1.50 கிலோ விதை தேவைப்படும்

தகுந்த இடைவெளியில் குழிகள் தோண்டி, குழிக்கு மூன்று என்ற அளவில் விதை விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு, ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டுவிட்டு, மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும்

முளைவந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும். களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும்

குளிர்காலத்தில் மூக்கடைப்பினால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா?

பளபளப்பான முகத்திற்கு தேநீரை எப்படி பயன்படுத்துவது?

கல்லீரலை சுத்தப்படுத்தி கழிவுகளை நீக்கும் உணவுகள்...

More Stories.

2 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய, தாவரத்துக்கு தாங்கிகளை அமைக்க வேண்டும். விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் மகசூல் பெறலாம். தொடர்ந்து, ஒரு வார இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம்

விவசாயிகள் இந்த முறையைக் கடைப்பிடித்தால், ஒரு ஹெக்டேருக்கு 14 முதல் 15 டன் வரை மகசூல் பெற்றுப் பயனடையலாம்” என புதுக்கோட்டை மாவட்டத்தில் பந்தல் காய்கறிகள் விவசாயம் செய்து வரும் நல்லதம்பி தெரிவித்தார்

மேலும் தோட்டக்கலை துறை மூலம் பந்தல் காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கல் தூண், சொட்டு நீர் பாசனம், மானியத் தொகை போன்ற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டும் வருகிறது

எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்து தினந்தோறும் வருவாய் பெறலாம் என்றும் விவசாயி நல்லதம்பி தெரிவித்தார்

next

இந்தியாவில் காணப்படும் 8 வகையான எலுமிச்சை மற்றும் அதன் பயன்கள்.!