தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணமா.?

வைரல் போட்டோ.!

கர்ணன், ஜெய் பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரஜிஷா விஜயன்

2021 ஆம் ஆண்டு வெளியான 'கர்ணன்' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடி போட்டதன் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானார்

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். தமிழ் படங்களில் நடித்து வந்த ரஜிஷா தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்

நடிகை ரஜிஷா விஜயன் பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்

இதனால் இருவரும் சில ஆண்டுகளாகவே ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர் என்ற செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது

இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸ் நடிகை ரஜிஷா விஜயனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “1461 நாட்கள்... சூரியனைச் சுற்றி மற்றொரு பயணத்தை எண்ணுகிறோம்” எனப் பதிவிடுள்ளார்

இவரின் இந்த பதிவிற்கு நடிகை ரஜிஷா ‘முடிவில்லா காதலை நோக்கி’ என்று கமெண்ட் செய்துள்ளார். இதன் மூலம் இருவரும் காதலித்து வருவதை ஊறுதி செய்துள்ளனர்

இவர்களின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இருவரின் திருமணத்தை குறித்து தான் டோபின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்

next

வெளிநாட்டில் நடைபெறப் போகும் நடிகை வரலட்சுமியின் திருமணம்… எந்த நாடு தெரியுமா.?