அயல்நாட்டு பறவைகளை வளர்த்து வரும் தஞ்சை இளைஞர்.!

தஞ்சையை சேர்ந்தவர் டேன் மேத்திவ்ஸ் இவர் தஞ்சையில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே இவருக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக அளவிலான ஆர்வம் இருந்துள்ளது.

எனவே அமெரிக்கா ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாட்டு பறவை மற்றும் வளர்க்கக்கூடிய விலங்கினங்களை அரசின் அனுமதி பெற்று வளர்த்து மற்றும் விற்பனை செய்து வருகிறார்.

இவருடைய அயல்நாட்டு செல்லப்பிராணிகள் பண்ணை தஞ்சை மாரியம்மன் கோயில் செல்லும் சாலையின் அருகே உள்ள ரத்தினம் நகரில் அமைந்துள்ளது

இவருடைய பண்ணையில் உள்ள பல்வேறு வகையான பறவைகள் மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவில் வீடுகளில் வளரக்கூடிய சிறிய அளவிலான விலங்கினங்களை பற்றி விரிவாக பின்வருமாறு பார்ப்போம்

சன் கனூர், எல்லோ சைடடு கனூர்,நீல சின்னான் கனூர், சாம்பல் கிளி ப்ளூகோல்டு, மக்கௌவ் ஊதா இறக்கை மக்கௌவ் நீண்ட வால் ஃபின்ச் ஆந்தை ஃபின்ச் பச்சை,

உடும்பு, நீல இகுவானா, ஃப்ளையிங்ஸ் குரில், உள்ளிட்ட பல வகையான செல்லப்பிராணிகள் உள்ளது.

மேலும் அமெரிக்கா ஆமை வகையான டேர்டில்ஸ், ஊது புறா, சிங்கப்புறா, ஆகிய செல்லப்பிராணிகளும் ஒரு சில பறவை வகைகள் வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது

இந்த செல்லப் பிராணிகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்தும் வருகிறார். 100ரூ யிலிருந்து 10 லட்ச ரூபாய் வரையிலான செல்லப்பிராணிகள் இவரிடம் உள்ளது

மேலும் 50க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் இவருடைய பண்ணையில் வைத்துள்ளார்.

கன்னியாகுமரியில் பிரமிப்பூட்டும் மாத்தூர் தொட்டிப்பாலம்.!