பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் மண்டபம்... சிறப்புகள் என்ன தெரியுமா.?

இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் கடல் நடுவே ஒரு பாறையில் அமைந்திருக்கும் இந்த விவேகானந்தர் மண்டபம் இப்போது பிரதமர் மோடி வருகையால் இந்திய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது

நேற்று இங்கு உள்ள தியான அறையில் தியானத்தை துவங்கிய மோடி நாளை வரை தியானத்தை தொடர உள்ளார்

இந்நிலையில் விவேகானந்தர் பாறை குறித்தும் அதன் மீது அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் குறித்தும் சிறப்புத் தகவல்களை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

கன்னியாகுமரிக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குமரி முனைக்குச் சுற்றுலா வரும் பயணிகள் கட்டாயம் கண்டுகளிக்கும் இடங்களில் முக்கியமான ஒன்றுதான் விவேகானந்தர் பாறை

கடல் நடுவே அமைந்துள்ள இந்த விவேகானந்தர் பாறைக்குப் படகுச் சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கின்றனர். குமரிக் கடல் நடுவே அமைந்துள்ள இந்த விவேகானந்தர் பாறைக்கு என்று தனி வரலாறு உள்ளது

பார்வதி தேவியும், சிவபெருமானும் ஒற்றைக் காலில் நின்ற இடம் தான் இந்த விவேகானந்தர் பாறை எனப் புராணங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், விவேகானந்தர் ஞானம் பெற்றதும் இதே இடம்தான் என்றும் கூறப்படுகிறது

இந்த விவேகானந்தர் பாறை தான் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது

புத்தரின் வாழ்வில் போதி மரத்திற்குத் தனி இடம் இருந்தது போன்று, சுவாமி விவேகானந்தரின் வாழ்விலும் இந்தப் பாறைக்குச் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு என்று மக்கள் நம்புகிறார்கள்

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

விவேகானந்தர் தியானம் செய்த அந்தப் பாறையில் 1972இல் விவேகானந்தர் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி வி.வி கிரி இதனைத் திறந்து வைத்தார்

அதன் பிறகு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் விவேகானந்தர் பாறைக்குப் படகு போக்குவரத்து தொடங்கியது

விவேகானந்தர் பாறை இருக்கும் இங்குதான் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் என முக்கடலும் இணைக்கிறது

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு நேரம் காத்திருக்க நேரிட்டாலும் படகில் பயணித்து விவேகானந்தர் மண்டபத்தைக் காணாமல் செல்வதில்லை

விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை இருக்கிறது. அந்த மண்டபத்தின் கீழ்த்தளத்தில் தியான அறை உண்டு

இந்த அறை தான் விவேகானந்தர் தியானம் செய்த இடமாகக் கருதப்படுகிறது. முழுக்க இருள் சூழ்ந்து இருக்கும் இந்த அறையில், எப்போதும் முழு அமைதி இருக்கும்

அவ்வப்போது வி.ஐ.பிகள் இங்கு வந்து சில நிமிடங்கள் தியானம் செய்வது வழக்கம். இங்கு தான் பிரதமர் நரேந்திரமோடியும் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்

next

கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!