நடிகை பூஜா நினைவிருக்கா.?

அவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?

நடிகர் மாதவன் நடித்த 'ஜேஜே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா

தொடர்ந்து அஜித்துடன் 'அட்டகாசம்' படத்தில் நடித்தார்

பின்னர் 'உள்ளம் கேட்குமே' படத்தில் ஆர்யாவுடன் நடித்து அதிக கவனம் பெற்றார்

மேலும் இவர் நடித்த 'ஜித்தன்' படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது

பின்னர் பரத்துடன் பட்டியல், மாதவனுடன் தம்பி, பிரசாந்த் உடன் தகப்பன்சாமி, ஜீவாவுடன் பொறி, ஆர்யாவுடன் ஓரம் போ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்

அதில் முக்கியமாக ஆர்யாவுடன் இவர் நடித்த 'நான் கடவுள்' படம் ஹிட்டானது

இதில் இவர் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. கண் தெரியாத பெண்ணாக பிச்சை எடுப்பது போல் கதாபாத்திரம் அமைந்திருக்கும்

அதனை ஏற்று மிக அற்புதமாக நடித்திருப்பார். நான் கடவுள் படத்தில் இவரது சிறப்பான நடிப்பிற்காக 'பிலிம்பேர் விருது' கிடைத்தது

பின்னர் 2016 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை நடிகை பூஜா திருமணம் செய்துகொண்டார்

இந்நிலையில், நடிகை பூஜாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

next

இயக்குனராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்.. ஹீரோ யார் தெரியுமா.?