கவின் - நயன்தாரா இணைந்துள்ள படத்தின் கதை இதுதான்.!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின். 'லிப்ட்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார் கவின்

அதன் பின் அவர் நடிப்பில் வெளியான 'டாடா' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது

அதன் பின், சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்நிலையில் கவினுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது

தற்போது பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’, இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’ப்ளடி பெக்கர்’

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் கவின்

இந்நிலையில், மற்றும் ஒரு படத்தில் கவின் கமிட்டாகியுள்ளார், அதில் சிறப்பு என்னவென்றால் கவினுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பாணியாற்றிய விஷ்ணு எடவான் என்பவர் இயக்கவுள்ளார்

மேலும், இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும், தன்னை விட வயது மூத்த பெண்ணை காதலிக்கும் வாலிபன் என்னனென்ன சவால்களை சந்திக்கிறான் என்பது தான் படத்தின் கதை என்ற தகவலும் வெளியாகியுள்ளது

கவினுடன் நயன்தாரா சேர்ந்து நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது

next

பிங்க் நிற உதடுகளைப் பெற இயற்கையான  9 வழிகள்.!