ஆண்டிற்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும் அதிசய மலர்... எங்கு பூத்தது தெரியுமா.?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குலாலர் பாளையம் தெருவில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவரது வீட்டில் பிரம்ம கமலப் பூ செடி வைக்கப்பட்டுள்ளது

ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் இரவில் மட்டுமே பூத்து பகலில் வாடிவிடும் பிரம்ம கமல பூக்கள் 

பிரம்ம கமல பூக்கள் என்று அழைக்கப்படக்கூடிய நிஷா கந்தி மலர்கள் சுமார் 15க்கும் மேற்பட்ட பூக்கள் ஒரே செடியில் பூத்துக் குலுங்குவது கண்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது

குறிப்பாக பிரம்ம கமல பூக்கள் என்பது இமயமலை சாரல்களில் பனி படர்ந்த சூழலில் அதிகம் பூத்துக் குலுங்கும்

தற்போது அனைத்து பகுதிகளிலும் இந்த பூக்கள் நடப்பட்டுவருகிறது

ஏசி இல்லாமலேயே வீடு குளிர்ச்சியாகும்... டேபிள் ஃபேனை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

உலகின் சிறந்த உணவுகளின் பட்டியல்... ஆதிக்கம் செலுத்தும் இந்திய உணவுகள்...

இந்த நாட்டில் பாம்புகளே இல்லையாம்! காரணம் என்ன?

More Stories.

பெரும்பாலும் கேதார்நாத், துங்கநாத், பத்ரிநாத் போன்ற சிவாலயங்களில் சிவனுக்கு மிகவும் உகந்த பூக்களாக இது கருதப்படுகிறது

மேலும் பிரம்மனுடைய நாபிக் கமலத்திலிருந்து உருவான பூ என்பதால் இந்தப் பூவின் உட்புறத்தில் பல நாகங்கள் உள்ளது போலவும் பிரம்மன் அமர்ந்திருப்பது போலவும் காட்சி அளிக்கும்

ஆண்டிற்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூத்து சிறப்பான நறுமணம் வீசும் இந்த பூக்களை புனிதமான பூக்களாக கருதுவதால் இந்தப் பூக்கள் மலர்ந்த உடன் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் பத்தி சூடம் ஏற்றிபூஜை செய்து வழிபட்டனர்

next

கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.!