நாம் வங்கியில் இருந்து பணம் பெற காசோலை எடுத்து செல்லும் போது சில நேரங்களில் காசோலையின் பின்புறமும் காசோலை வழங்கியவரின் கையெழுத்து வேண்டும் என்று அவர்கள் நம்மை திரும்பி அனுப்பி இருப்பார்கள்
ஒருவேளை அது நமது காசோலையாக இருந்தாலோ அல்லது ஆர்டர் காசோலையாகவோ இருந்தால் அந்த கையெழுத்து தேவையில்லை
யார் வேண்டுமானாலும் அந்த காசோலையை பயன்படுத்தி பணம் பெறக்கூடிய பியரர் காசோலைக்கு மட்டுமே அந்த மாதிரி கையெழுத்து வேண்டும்
ஏனெனில் ஆர்டர் காசோலை என்றால் காசோலையில் பெயர் உள்ள நபர் மட்டுமே அந்த பணத்தை பெற முடியும்
ஆனால் பியரர் காசோலையில் அப்படி இல்லை அந்த காசோலையை யார் கொண்டு வந்தாலும் பணம் பெற முடியும்
பின்புறமும் கையெழுத்து இருக்கும் பட்சத்தில் வழங்கியவரின் அனுமதியோடு தான் இந்த பணம் காசோலை கொண்டு வருபவரிடம் வழங்கப்படுகிறது
தவறு நடக்கும் பட்சத்தில் அதற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பு ஆகாது என்று பொருள்
எனினும் 50,000 கற்கும் அதிகமான தொகை பெறும் சுழலில் வங்கிகள் பணம் பெறுபவரின் முகவரி சான்றை பெற்று தான் பணத்தை வழங்கி வருகிறது
காசோலை மூலம் பணம் பெறும் போது பாதுகாப்பை உறுதி செய்யவே இது போன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது
கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!