நயன்தாரா திரிஷாவுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... கோடிகளில் சம்பளம்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒவ்வொரு ஹீரோயின்கள் பிரபலமாக இருப்பார்கள். சில சமயம் அவர்களின் மார்க்கெட் உச்சத்திலும், சில சமயங்களில் சரிந்தே கூட போய்விடும்

அப்படி தமிழ் சினிமா ஹீரோயின்கள் பல பேர் பிரபலமாக இருந்து அதன் பின் அப்படியே மவுசு குறைந்து போயுள்ளார். மார்க்கெட்டை தக்கவைத்து கொண்டு பிரபல நடிகையாக வலம் வருவது சவாலான விஷயம் தான்

ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தங்களுக்கான மவுசு குறையாமல், லட்சக்கணக்கான ரசிகர்களை தங்கள் வசம் கொண்டு பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா

இவர்கள் இருவருமே அன்று முதல் இன்று வரை தங்களுக்கான டிமாண்ட் குறையாமல் பார்த்து வருகின்றனர்

நயன்தாரா திரிஷா இருவருமே இடையில் சறுக்கல்களை சந்தித்தாலும், மீண்டும் அடித்துபிடித்து தங்களுக்கான இடத்தை தக்கவைத்து வருகின்றனர்

பொதுவாக நடிகைகள் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார்களோ அதற்கு ஏற்ப அவர்களது சம்பளமும் உயரும்

அதன்படி பார்க்கும் போது நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா இருவருமே ஒரு படத்திற்கு தற்போது வரை ரூ.10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகின்றனர்

ஆனால் இவர்களை பின்னுக்கு தள்ளி அவர்களின் சம்பளத்தை விடவும் அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார் பிரபல நடிகை ஒருவர்

கீதா கோவிந்தம், வாரிசு, புஷ்பா போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா தான் அது

எஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிக்க ரஷ்மிகா மந்தனா ரூ.15 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்

அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பு நிறுவனம்  ரூ.13 கோடி சம்பளமாக வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

next

ஹிந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட டாப் 9 தமிழ் படங்கள்.!