ஊட்டி அருகே இப்படி ஒரு நீர்வீழ்ச்சியா... அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு சூப்பர் ஸ்பாட்.!

நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா பயணங்களுக்காக அதிகளவில் பயணிகள் வருகை தருகின்றனர்

அவ்வாறு வருகை தரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல சுற்றுலாத் தலங்கள் நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும் அங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், தனிமை விரும்பிகள் மனம் அதில் லயிக்காது

அப்படிச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாமல் இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் புதிதாக ஏதாவது சுற்றுலாத் தலங்கள் உள்ளதா எனத் தேடி அலைவார்கள்

அப்படிப்பட்டவர்கள் மனதை மகிழ்விப்பது தான் 'கெதரை நீர்வீழ்ச்சி'. கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கு இந்த நீர்வீழ்ச்சி புதுமையான அனுபவத்தைத் தரும்

ஊட்டியிலிருந்து எப்பநாடு செல்லும் வழியில் உள்ளுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குச் செல்லும் சாலையில் இடது புறமாகச் செல்லும் வழியில் தான் இந்த அழகிய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது

பல்வேறு கிராமப் பகுதியிலிருந்தும் வரக்கூடிய சிறிய அளவிலான நீர் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு சிறிய ஓடையாக ஓடுகிறது. இந்த ஓடை இடுஹட்டி, கொதுமுடி, தூனேரி ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நீர் இவ்வழியாகச் செல்கிறது

இந்த ஓடையில் வரும் நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் வெளியூர் மக்கள் அறியாத வண்ணமே இந்த சிறிய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மழைப்பொழிவு காலங்களில் மண்ணுடன் கலந்து ஓடிவரும் நீர் இந்த நீர்வீழ்ச்சியை செந்நிறமாக காட்டுகிறது

பொதுமக்கள் பெரும்பாலும் இந்த நீர்வீழ்ச்சி பகுதியை போட்டோ ஷூட் செய்வதற்கான இடமாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சில்லிட வைக்கும் குளிர்ச்சி காரணமாகப் பொதுமக்கள் பெரும்பாலும் இங்கு நீர்வீழ்ச்சிகளில் குளிப்பது இல்லை

மேலும், இந்த நீர்வீழ்ச்சியின் ஓடைக்கு இடதுபுறம் விவசாயம் செய்யும் பட்டா நிலங்களும், வலது புறம் வனத்துறைக்குச் சொந்தமான அடர்ந்த காடுகளும் அமைந்துள்ளது

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

மேலும், இந்த பகுதிகளில் வனவிலங்குகள் நீர் அருந்துவதற்காக அவ்வப்போது உலா வரும் என்பதால் உள்ளூர் பொதுமக்கள் இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்ல அச்சமடைகின்றனர்

இதுகுறித்து அந்த பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், “முன்பெல்லாம் கெதரை நீர்வீழ்ச்சி அதிகம் நீர் வரும் இடமாக இருந்தது. தற்போது தான் நீர் வரத்து குறைந்துள்ளது. காலத்திற்கேற்றார் போல நீர்வரத்தும் குறைந்துள்ளது

முன்பொரு காலத்தில் எப்பநாடு செல்லும் பேருந்து இந்த ஆற்றின் வழியாகவே சென்றது. அதன் பிறகு பெரிய பாலம் அமைக்கப்பட்டு அந்தப் பாலத்தின் வழியாகப் போக்குவரத்து நடைபெறுகிறது

முன்பு இங்கு வற்றாமல் தண்ணீர் ஓடி கொண்டிருக்கும் ஆனால் தற்போது எல்லாம் வெயில் காலங்களில் வற்றி விடுகிறது. இந்த இடத்தைப் பற்றி தெரிந்தவர்கள் இங்கு வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து ஆனந்தம் அடைகின்றனர்

மேலும் இந்த பகுதியில் உள்ள உயர்ந்த மலைகள், வனப்பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமங்களையும் சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர்” எனத் தெரிவித்தார்

next

செக்கின் பின்புறமும் கட்டாயம் கையெழுத்து இட வேண்டும்… ஏன் தெரியுமா.?