அகழாய்வில் கிடைத்த பொக்கிஷம்... வெம்பக்கோட்டையில் நடந்த அதிசயம்.!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் கரையில், முன்னோர்களின் முந்தைய கலாச்சாரத்தை கண்டறிய அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது

இங்கு ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், இதில் ஏராளமான சுடுமண் பொருட்கள், கண்ணாடி மணிகள் போன்ற தொல் பொருள்கள் கண்டறியப்பட்டது

இதனை அடுத்து கடந்த 18 ம் தேதி மூன்றாவது கட்ட அகழாய்வு முதல்வரால் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது

இதனை தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வில், சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் பொம்மையின் தலைப்பகுதி கண்டறியப்பட்டது

இதை பற்றி பேசிய அகழாய்வு துறை அதிகாரிகள், கண்டறியப்பட்ட பெண் பொம்மையானது நேர்த்தியான வேலைப்பாடுகளுடன், சிகை அலங்காரத்துடன் செய்யப்பட்டு உள்ளது

இதன் மூலம் முன்னோர்களின் கலைநயம் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம் என்றனர்

ஏற்கனவே இங்கு நடைபெற்ற முந்தைய கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது

next

பார்த்தவுடன் கவரும் பைக்காரா நீர்வீழ்ச்சி… ஊட்டி போறிங்கன்னா இந்த ஸ்பாட்டை மிஸ் பண்ணிடாதீங்க.!