கோலாகலமாக தொடங்கிய வரலக்ஷ்மியின் திருமண கொண்டாட்டம்... குவிந்த திரை பிரபலங்கள்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், பிரபல நடிகர் சரத்குமாரின் மூத்த மகளுமான வரலக்ஷ்மியின் திருமண கொண்டாட்ட நிகழ்வுகள் கோலாகலமாக நடந்து வருகிறது

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்து வந்தார் வரலக்ஷ்மி

இருவரின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் சிம்பிளாக நடந்து முடிந்தது

வரலக்ஷ்மி நிக்கோலாய் இருவரின் திருமணத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார் வரலட்சுமி

திருமணத்திற்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில், வரலக்ஷ்மியின் திருமண கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கியது. முன்தினம் மெஹந்தி நிகழ்வு நடைபெற்றது

மஞ்சள் உடையில் வரலக்ஷ்மி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், வரலக்ஷ்மி நிக்கோலாய் இருவரின் சங்கீத் (ப்ரீ வெட்டிங்) நிகழ்வு நேற்று இரவு சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது

சங்கீத் நிகழ்ச்சிக்கு தக தகவென மின்னும் வெள்ளை நிற லெகங்காவில் தேவதை போல் காட்சியளித்தார் மணப்பெண் வரலக்ஷ்மி

கோலாகலமாக நடந்த வரலக்ஷ்மி நிக்கோலாய் சங்கீத் நிகழ்வில் சினிமா பிரபலங்கள் பலரும் குவிந்தனர்

திரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, பிரபுதேவா, பிரபு, விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா, வாசுகி பாஸ்கர், மீனா, மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்

கருப்பு உடையில் ராதிகா மற்றும் சரத்குமார் இளமை மாறாமல் சங்கீத் நிகழ்வில் கலக்கி வந்தனர்

நடிகை வரலக்ஷ்மி முன்னணி பிரபலங்களுடன் தனது சங்கீத் நிகழ்வை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது

next

நெட்ஃபிளிக்ஸில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 சிறந்த தமிழ் திரைப்படங்கள்.!