ரஜினிகாந்த் அடிக்கடி இப்படி விரல்களை வைப்பது ஏன் தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடித்த 'அப்பூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்

தொடர்ந்து கமலுடன் பல திரைப்படங்களில் நடித்த ரஜினி 1978 இல் இயக்குனர் பாஸ்கர் இயக்கிய 'பைரவி' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து சூப்பர் ஸ்டாராக மாறினார்

ரஜினிகாந்த்தின் ஸ்டைல், பேச்சு என இவர் செய்வது அனைத்தும் தனித்தன்மையாக இருப்பதால் இவர் செய்யும் ஒவ்வொரு செய்கையும் ரசிகர்களை கவர்ந்தது

ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிக்கும் போதும், இல்லை சாதாரண நாட்களின்போதும் தன் கையின் கட்டை விரல் மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவார்

இதனை நாம் பல போட்டோக்களிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். இதை ஏன் அவ்வாறு செய்கிறார் என்ற தகவல் வந்துள்ளது

இதுகுறித்து யோகா நிபுணர்கள் கூறுகையில், ரஜினிகாந்த் பின்பற்றும் கை முத்ரா 'சின் முத்ரா' 

அப்படி செய்யும்போது மூளை நரம்புகள் நன்றாக வேலைசெய்யும். இதனால் நினைவாற்றல் அதிகமாகும், மன அழுத்தம் மற்றும் மூளை அழுத்தம் குறையும்

கோபம், தூக்கமின்மை, தலைவலி இவற்றையெல்லாம் நீக்குகிறது. இதனால் நாம் இந்த சின் முத்திரையில் வைத்து அமரும்போது நம்முடைய நரம்புகளுக்கு அமைதியை கொடுத்து கவனம் சிதறாமல் வைக்கிறது

இதனால் தான் நாம் யோகாவின்போது இந்த முத்திராவை பயன்படுத்துகிறோம் என்றனர்

இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் செய்யும் இந்த சின்ன செயலில் இவ்வளவு சக்தி இருக்கிறதா? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்

next

நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 8 சிறந்த படங்கள்.!