இந்த குழந்தை இன்று பட்டிதொட்டி எங்கும் கலக்கும் பெரிய நடிகர்...  யார் தெரியுதா.?

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் பேவோரைட் நடிகர் ஒருவரின் குழந்தை வயது போட்டோ தற்போது ட்ரெண்டாகிறது

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபல நடிகராக வலம் வரும் இந்த நடிகருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம்

சமீபத்தில் வெளியான இந்த நடிகரின் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது

ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திர வேடங்கள், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து அசத்துபவர்

ஆரம்பகாலகட்டத்தில் அறிமுகமான முதல் படம் இவருக்கு தோல்வியை தந்ததால் இவருக்கு நடிக்க வரவில்லை என்று பல விதமான விமர்சனங்கள் வந்தது

அதன் பின் 7 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் பின் மாஸ் காம்பேக் கொடுத்து திரையுலகை தனது நடிப்பால் திரும்பி பார்க்க வைத்தார்

இந்த பிரபல நடிகரின் தந்தை தமிழ், மலையாள திரையுலகின் மிகவும் பிரபல இயக்குனர். இவரது மனைவி தமிழ், மலையாள சினிமாவின் பேவோரைட் நடிகை

இந்த ஹீரோ யாரென்று தெரிகிறதா.? சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் தற்போது வேட்டையன் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாகி நடித்து வரும் நடிகர் பகத் பாசில் தான்

வருஷம் 16, பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை போன்ற வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்த இயக்குனர் பாசிலின் மகன் தான் இவர்

பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவரான இவர் தமிழ் மலையாளம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்

ரசிகர்கள் இவரை அனுப்புடன் 'FaFa' என்று அழைப்பதுண்டு

next

ரஜினிகாந்த் அடிக்கடி இப்படி விரல்களை வைப்பது ஏன் தெரியுமா.?