உஷார்...  முன்பின் தெரியாதவர்களுக்கு டிரெயின் டிக்கெட் முன்பதிவு செய்தால் ₹10,000 அபராதம்.!

இந்தியா இரயில்வே Irctc வழியாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை அறிமுகம் செய்தது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

சிலர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய தெரியவில்லை என்றாலும் மற்றவர்களின் உதவி பெற்று முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்

இந்நிலையில் ஒரு நபர் அவரின் குடும்ப உறுப்பினர், முன்பின் தெரியாதவர்கள், இரத்த சொந்தமில்லாதவர்களுக்கு டிக்கெட் பதிவு செய்து கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற ஒரு செய்தி வைரலாகியது

நண்பர்கள், தெரிந்தவர்கள் யாருக்கும் டிக்கெட் போட்டு தரக்கூடாதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இரயில்வே நிர்வாகம் இது தொடர்பான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது

IRCTC ல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்கனவே லாகின் ஐடி வைத்திருக்க வேண்டும். விதிமுறைப்படி ஒரு ஐடியை வைத்து ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் வரை பதிவு செய்து கொள்ளலாம்

இதே ஆதார் எண் இணைத்து இருந்தால் 24 டிக்கெட் வரை புக் செய்து கொள்ளலாம்

இந்த டிக்கெட்டுகளை நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ப நண்பர்கள், உறவினர்கள் என யாரும் வேண்டுமானாலும் பதிவு செய்து கொடுக்கலாம்

அதற்கு எந்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை. ஆனால் இதை வணிக ரீதியாக பயன்படுத்துவதை ரயில்வே நிர்வாகம் குற்றம் என்கிறது

வணிக ரீதியாக டிக்கெட் புக் செய்து தர ஏற்கனவே ஏஜென்டுகள் உள்ள நிலையில், தனி நபர் வேறு ஒருவருக்கு டிக்கெட்டை கமிஷன் பெற்று புக் செய்து தருவது தடை செய்யப்பட்டுள்ளது

இதற்கு தான் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரயில்வேயின் இந்த விதிமுறை தான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

next

கடலை ரசித்த படி மீண்டும் ரயிலில் பயணிக்கலாம்.!