தளபதி விஜய் என்ன படித்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா.?

தளபதி விஜய் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

தளபதி விஜய் பிரபல திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா தம்பதியரின் மகன் ஆவார்

விஜயின் தாய் ஷோபா இந்து குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை சந்திரசேகர் தமிழ் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்

விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார், ஆனால் எதிர்பாராவிதமாக 2 வயதில் அவர் இறந்து விட்டார்

தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி காரணமாக குறும்புத்தனம் மற்றும் அதிகம் பேசுபவராக இருந்த விஜயின் கேரக்டர் சீரியஸாகவும், அமைதியாகவும் மாறி விட்டதாக தாயார் ஷோபா கூறியுள்ளார்

சிறு வயதில் இருந்தே விஜய்க்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே 10 வயதாக இருக்கும் போதே வெற்றி என்ற படத்தில் குழந்தை நடிகராக சிறு வேடத்தில் நடித்தார்

விஜயின் முதல் படம் இது தான், மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக ரூ.500 சம்பளமாக அவருக்கு கொடுக்கப்பட்டது

ஆனால் நடிகர் விஜய் என்ன படித்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா.?

விஜய் தனது பள்ளி படிப்பை பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கினார்

பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்

பின்னர், சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இளங்கலை பட்டப்படிப்பை வெற்றிகரமாகப் படித்து முடித்தார்

next

தனுஷின் ‘ராயன்’… நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 8 சுவாரஸ்ய தகவல்கள்.!