ரியாஸ்கான் மகன் ஷாரிக்கிற்கு திருமணம்..

மணப்பெண் யார் தெரியுமா.?

சின்னத்திரையின் நட்சத்திர ஜோடி ரியாஸ்கான், உமா ரியாஸ் தம்பதி

கட்டுமஸ்தான உடலுக்கு பெயர் போன ரியாஸ் கான் வெள்ளித்திரையில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்

உமா ரியாஸ் ஜோடி நம்பர் ஒன், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரன்னர் பட்டத்தை பெற்றவர்

இந்த பிரபல தம்பதியின் மூத்த மகன் ஷாரிக் ஹசன், சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி

பிக் பாஸ் வீட்டில் 49 நாட்கள் இருந்து பின்னர் வெளியேறிய ஷாரிக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்

அதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட், பிபி ஜோடிகள் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்

அனிதா சம்பத்துடன் ஜோடி போட்ட இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த நேரம், ரிசார்ட் மேலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்

இந்நிலையில், ஷாரிக்கிற்கு வருகிற  8ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது, இதை அவரது தாய் உமா ரியாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து உறுதி செய்துள்ளார்

ஷாரிக் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் உமா ரியாஸ். ஷாரிக் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் பெயர் மரியா ஜெனிபர்

8ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ள ஷாரிக் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர்

அதன்பின் நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது

next

ரூ. 225 கோடி பட்ஜெட்… ஆனால் இந்தியன் 2 மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?