ஐபாஸ் அமைப்பு சார்பில் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் செல்ல பிராணிகள் கண்காட்சி மற்றும் சர்வதேச பூனைகள் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது
இதில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பெங்கால் பூனை, சைபீரியன் பூனை, பிரிட்டிஷ் பூனை, குட்டை பூனை உள்ளிட்ட பல்வேறு பூனை இணங்கள் இடம்பெற்றுள்ளன
மொத்தம் 150 வகையான பூனைகளும் நாய் இனங்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
பூனை மற்றும் நாய்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தபட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
இவை தவிர கண்காட்சி நடைபெறும் இடத்திலேயே குதிரை சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், உணவகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நுழைவு கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது