நீங்களும் பென்ஷன் பெறலாம்... அரசு ஊழியராக இருக்க வேண்டாம்.. எப்படி தெரியுமா.?

மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு நிதி சார்ந்த உதவி திட்டங்களையும், கடன் திட்டங்களும் மற்றும் பென்ஷன் திட்டங்களையும் வழங்கி வருகிறது

இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்த திட்டம் நாட்டு மக்களுக்கு பொருளாதார & சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதியுதவி வழங்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

தினசரி ஊதியம் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள் & முறையான ஓய்வூதியத் திட்டம் இல்லாத சிறு வணிகர்களுக்கான இடைவெளியை இந்த திட்டம் நிரப்புவதோடு, இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம்

இந்த திட்டத்தில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும்

பலன் பெற விரும்பும் நபரின் வயதுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தி ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000 ஓய்வூதியமாக பெறலாம்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை கடந்த பிறகு ஓய்வூதியம் வழங்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தக் திட்டத்தில் இணைய முடியும். விவசாயத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகபட்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்கும்

செலுத்தப்படும் பிரீமியம் வாடிக்கையாளரின் வயதைப் பொறுத்து மாறுபடும். 18 வயது நிரம்பிய ஒருவர் சேர்ந்தால் மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை செலுத்தலாம்

60 வயது வரை மாதம் ரூ.210 செலுத்தி வந்தால், ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும். 40 வயதான ஒருவர் மாதம் ரூ.1,454 பிரீமியம் செலுத்த வேண்டும்

அப்போதுதான் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியம் குறைவாக இருந்தால் சரி என்று நினைத்தால் குறைந்த பிரீமியம் செலுத்தலாம்

பிரீமியம் நிலை ரூ.291 முதல் ரூ.1,454 வரை உள்ளது. சிறு வயதிலேயே இந்தத் திட்டத்தில் சேமிக்கத் தொடங்கினால், அதிக பலன்களைப் பெறலாம்

next

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு குட்நியூஸ்… இனி ரேஷன் கார்டு தேவையில்லை.. வந்தாச்சு சூப்பர் ஆப்.!