சண்டேவை குழந்தைகளுடன் என்ஜாய் பண்ண மதுரையில் கிங்காங் பொருட்காட்சி.!

காந்தி மியூசியம் மைதானத்தில் குழந்தைகளை மகிழ்விக்க கூடிய வகையில் ராட்சசன் கிங்காங் பொருட்காட்சி என்ற தலைப்பில் பொருள்காட்சி நடைபெறுகிறது

இந்த பொருள்காட்சியின் நுழைவாயிலில் ராட்சத கிங்காங் மாதிரியும், உள்ளே சென்றால் ரோபோடிக் பறவைகள் சரணாலயம் என்ற வகையில் கிளி, 

வாத்து, மயில், வவ்வால், குருவி போன்ற பல வகையான பறவைகள் அசைந்து இசை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

பின்பு உள்ளே சென்றால், குழந்தைகளுக்கான கார், மோட்டார் பைக், சைக்கிள் போன்ற பலவிதமான விளையாட்டு பொருட்களும், பெண்களுக்கான அழகு சாதன பொருட்களும், 

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் 90 கிட்ஸ் உணவான ஜெல்லி மிட்டாய், டாடி மம்மி, ரோஸ் மிட்டாய் போன்ற உணவுகளும் விற்கப்படுகிறது

இதுபோக அரிசி வடகம், இனிப்பு மற்றும் காரவகை போன்ற உணவுகளை தரமான முறையிலையும் விற்கின்றனர்

மேலும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் பண்ணக்கூடிய வகையில் கொலம்பஸ், வாட்டர் போட்டிங், ஜம்பிங் பவுன்ஸ்,

பேய் வீடு போன்ற பலவிதமான விளையாட்டு தளங்களும் அப்பகுதியிலேயே டெல்லி அப்பளம், காலிபிளவர், ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா போன்ற திண்பண்டங்களும் விற்கப்படுகிறது.

இக்கண்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மதியம் 2 மணி அளவில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெறுகிறது

கன்னியாகுமரியில் பிரமிப்பூட்டும் மாத்தூர் தொட்டிப்பாலம்.!