நாக சைதன்யா - சோபிதா திருமண நிச்சயதார்த்தம்...

ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை..

நடிகர் நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலித்து வருவதாகப் பல செய்திகள் வெளியானது

மேலும் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. ஆனால் இருவரும் அந்த செய்திகள் உண்மை இல்லை முற்றிலும் வதந்தி என்று மறுத்தனர்

குறிப்பாக சோபிதா துலிபாலா இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார். ஆனால் அதன் பின் இருவரும் ஒன்றாக சென்ற ட்ரிப் போட்டோஸ் வெளியானது

தொடர்ந்து ஊடகங்கள் இவர்களின் காதல் குறித்து கிசுகிசுத்து வந்த நிலையில், ரசிகர்கள் இது உண்மையா இல்லை வதந்தியா என்ற குழப்பத்திலேயே இருந்து வந்தனர்

ஆனால் தற்போது வதந்திக்கு இடமில்லை என்று சொல்லும் வகையில் நாக சைதன்யா-சோபிதா துலிபாலா இருவரின் நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது

இருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்த செய்தியை நாகார்ஜுனா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்

எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்பதை அறிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம்

சோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் ஒருவராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்

இந்த ஜோடியின் வாழ்க்கையில், வாழ்நாள் முழுவதும் அளவற்ற காதலும் மகிழ்ச்சியும் பொங்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக. 8.8.8 முடிவில்லா காதலின் தொடக்கம் என்று பதிவிட்டுள்ளார்

next

OTT-ல் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 தமிழ் கிரைம்-திரில்லர் வெப் சீரிஸ்.!