ஹாலிவுட் படம் உட்பட நடிகை ஸ்ரீதேவி நிராகரித்த 8 பிளாக்பஸ்டர் படங்கள்.!

01

பாகுபலி (2015)

ரம்யா கிருஷ்ணனுக்கு முன், ராஜமாதா சிவகாமியாக நடிக்க ஸ்ரீதேவியை தான் இயக்குனர் அணுகினர், ஆனால் அவர் அந்த பாத்திரத்தை நிராகரித்துவிட்டார்

02

பாக்பன் (2003)

ஸ்ரீதேவி அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கவிருந்தார், ஆனால் அவர் இந்த படத்தை நிராகரித்தால் அதில் ஹேமா மாலினி நடித்தார்

03

மொஹப்பதீன் (2001)

வெளியிடப்படாத ஒரு பாத்திரத்திற்காக படக்குழுவினர் ஸ்ரீதேவியை அணுகினர், ஆனால் அவர் அதை நிராகரித்தால் இயக்குனர் அந்த கதாபாத்திரத்தை ஸ்கிரிப்டில் இருந்து நீக்கிவிட்டார்

04

தில் தோ பாகல் ஹை (1997)

யஷ் சோப்ரா முதலில் ஸ்ரீதேவியை தான் நாயகி கதாபாத்திரத்திற்கு அணுகினார், ஆனால் அவர் அதில் நடிக்க நிராகரித்தால் அந்த பாத்திரம் மாதுரி தீட்சித்திற்கு சென்றது

05

டார் (1993)

தகவலின் படி நாயகியாக ஸ்ரீதேவியை தான் முதலில் யஷ் சோப்ரா அணுகினர். ஆனால் அவர் கதாபாத்திரம் பிடிக்காததால் படத்தை நிராகரித்தார்

06

ஜுராசிக் பார்க் (1993)

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஆஸ்கார் விருது பெற்ற இந்த பிளாக்பஸ்டர் படத்திற்காக ஸ்ரீதேவியை அணுகினர். ஆனால் மற்ற படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால், அவர் அதை நிராகரித்து விட்டார்

07

பாசிகர் (1993)

இப்படத்தில் முதலில் ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அவர் நிராகரித்த பிறகு ஸ்கிரிப்ட் மாற்றியமைக்கப்பட்டு அதில் கஜோல் மற்றும் ஷில்பா ஷெட்டி நடித்தனர்

08

பீட்டா (1992)

இந்த படத்திற்காக முதலில் ஸ்ரீதேவி தான் பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த கதாபாத்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால் அவர் அதை நிராகரித்தார். பின்னர் தான் இதில் மாதுரி தீட்சித் நடித்தார்

next

65 வருடங்களுக்கு முன் சிவாஜி – பத்மினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?