பூங்காவில் இது மட்டும் தான் மிஸ்ஸிங்... சிவகங்கை பூங்கா குறித்து தஞ்சை மக்களின் கருத்து.!

தஞ்சை பெரியகோவிலுக்கு அருகே சிவகங்கை பூங்கா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1871-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது

தஞ்சையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக தஞ்சை மக்களின் விருப்பமான இடமாக சிவகங்கை பூங்கா அமைந்திருந்துள்ளது

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கடந்த 2019-ம் ஆண்டு சிவகங்கை பூங்கா மூடப்பட்டது

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 8ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கே என் நேரு ஆகியோர் பூங்காவை திறந்து வைத்தனர்

இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள், எலெக்ட்ரிக் ரயில், நடைபாதை வசதிகள், பசுமையான புல்வெளிகள் இயற்கையாக காட்சியளிக்கிறது

இன்னும் பூங்காவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பூங்கா திறக்கப்பட்டதால் தினம்தோறும் ஏராளமான பொதுமக்கள் பூங்காவை சுற்றி பார்த்து வருகின்றனர்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பூங்கா திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என மக்கள் கருத்து தெரிவித்தனர்

இருந்தாலும் முன்பு இருந்த பூங்காவில் மான், நரி, முயல், குரங்கு, புலி உள்ளிட்ட பல விலங்கினங்கள் இருந்தது. ஆனால் தற்போது அது இல்லதாதுதான் வருத்தமாக உள்ளது என்றனர்

மேலும் ஏற்கனவே 5 ஆண்டுகள் சென்றுவிட்டது. இருந்தாலும் இன்னும் பல வேலைகள் நிலுவையில் உள்ளது. ஏன் எனத் தெரியவில்லை

இன்னும் நீர்ச்சறுக்கு உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும், மத்தப்படி அணைத்தும் அருமையாக இருக்கிறது என்று மக்கள் கூறினர்

next

பிரதமராக இருந்தும், தேசிய கொடியை ஏற்றாதவர் யார் தெரியுமா.?