தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு...

விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்-1

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது

இந்த முறை தமிழ் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க விருதுகளை பெற்றுள்ளது

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சிறந்த திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன் -1’ தேர்வு செய்யப்பட்டுள்ளது

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த பின்னணி இசை விருதும்

படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும்

‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காத’ பாடலுக்கு கோரியோகிராப் செய்ததற்காக சிறந்த நடனத்திற்கான விருதுக்கு சதீஷ் மற்றும் ஜானி தேர்வாகியுள்ளார்

‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் சண்டைக்காட்சிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த அன்பு, அறிவு இருவரும் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளனர்

மேலும், 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ‘Wholesome Entertainment Best Film Award’ ‘காந்தாரா’ படத்திற்கு வழங்கப்படுகிறது

மேலும் அந்த படத்தை இயக்கி அதில் நாயகனாக நடித்த நடிகர் ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

next

இந்தியாவின் முன்னணி பணக்காரரை திருமணம் செய்த பிரபல நடிகை.!