வசூலில் மாஸ் காட்டும் தங்கலான்...

4 நாட்களில் இத்தனை கோடி வசூலா.?

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான்

கோலார் தங்கவயலை கதைக்களமாக கொண்டும், மாய எதார்த்த திரைக்கதையைக் கொண்டும் படத்தினை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித்

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் தங்கலான் திரைப்படம் வெளியானது

தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது

இந்நிலையில், படம் வெளியான நான்கு நாட்களில் சுமார் 29 கோடியே 35 லட்சம் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது

நான்காவது நாள் மட்டும் தங்கலான் திரைப்படம் 5 கோடியே 65 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

next

‘தங்கலான்’ ஆரத்தி ரோலில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் தெரியுமா.!