தொட்டபெட்டா போக பிளான் போட்டு இருக்கீங்களா... அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்.!

நீலகிரிக்குச் சுற்றுலா வரும் பயணிகளைக் கவரும் முக்கியமான சுற்றுலாத் தலமாக தொட்டபெட்டா காட்சி முனை விளங்குகிறது

உயரமான மலைச்சிகரமான தொட்டபெட்டாவில் எப்போதும் இதமான சூழல் நிலவும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டாவைப் பார்வையிட மிஸ் பண்ண விரும்ப மாட்டார்கள்

அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா வரும் போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் நிலவியது

தொட்டபெட்டா பாஸ்ட் டேக் சோதனைச் சாவடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவியதால் அது இடம் மாற்றி அமைக்கப்பட்டது

இந்த பணியின் காரணமாகக் கடந்த மே மாதம் சில நாட்கள் சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் பயணிகள் வழக்கம் போல் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்

இந்நிலையில் தொட்டபெட்டா காட்சி முனையில் மூன்று நாட்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது

இதனால் தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்ல வேண்டுமென எதிர்பார்ப்புடன் நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

next

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சியா… எல்க் நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் பயணிகள்.!