குற்றாலத்தில் புதிய செல்ஃபி ஸ்பாட்... இரவு நேரத்தில் மின்னும் குற்றாலம் அருவி.!

தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளம் குற்றாலம். தென்னகத்தில் ஸ்பா என்று அழைக்கபடும் குற்றாலம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரம் ஆகும்

ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசன் நேரங்களில் குற்றால சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு 2023 சாரல் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு குற்றால சாரல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

கொழு கொழு குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

17-ம் தேதி வாலிபால் போட்டி, படகு போட்டி, நாய்கள் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள்,18-ம் தேதி பளு தூக்குதல், ஆணழகன் போட்டிகள், கோலப் போட்டி, யோகா நடனம் & கலை நிகழ்ச்சிகள் போன்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றது

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் செல்ஃபி பாயிண்ட்‌ அமைக்கும் பொருட்டு இப்போதைய தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் அரசு அதிகாரிகளுடன் 2022 ஆம் ஆமடு கள ஆய்வு மேற்கொண்டார்

அதனைத் தொடர்ந்து தற்போது குற்றால சாரல் திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவியில் உள்ள பாலத்தில் ஐ லவ் குற்றாலம் செல்பி அமைக்கப்பட்டுள்ளது

குற்றால சாரல் திருவிழா 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் குற்றால செல்பி பாயிண்ட் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

குற்றால மெயின் அருவியில் பேக்ரவுண்ட் ஆக வைத்து ஐ லவ் குற்றாலம் என்ற வாசகத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

குற்றால அருவி முன்பு அமைக்கப்பட்டு இருக்கும் செல்ஃபி பாய்ண்ட் பயணிகள் பலரது கவனத்தையும் ஈர்த்தது

மேலும் குற்றால மெயின் அருவியில் இரவு நேரங்களில் டிஸ்கோ லைட் போடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் வண்ண விளக்குகள் மிளிர குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்

next

தொட்டபெட்டா போக பிளான் போட்டு இருக்கீங்களா… அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்.!