சுற்றுலா பயணிகளை கவரும் மணல் பரப்பு... அரிச்சல்முனையின் சுவாரஸ்யம் மிகுந்த இயற்கையின் வினோதம்.!

ராமநாதபுரத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும், ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள தனுஷ்கோடியானது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி குட்டி சிங்கப்பூர் என பெயர் பெற்றது

1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் இப்படி ஒரு இடம் இருந்தது தெரியாமல் மொத்தமாக அழிந்தது

புயலின் தப்பிய ரயில் நிலையம், தபால் அலுவலகம், பிள்ளையார் கோவில், தேவாலயம் ஆகியவற்றை காண ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர்

தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் 2017-ம் ஆண்டு தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் சாலை அமைத்து உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அரசுபேருந்துகள் மற்றும்

வாகனங்களில் சென்றுவர வசதிகள் ஏற்படுத்தப்பட்டபின் தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வதால் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்குகிறது

தற்போது தென்மேற்கு திசையில் காற்று வீசுவதால் கடலில் நீரோட்டம் மாறுபட்டு அரிச்சல்முனை வடக்குகடல் பகுதியில் சில தூரம் வரை கடல் உள்வாங்கி மண் அரிப்பு ஏற்பட்டு மணல்பரப்பு உருவாகி உள்ளது

இந்த நிகழ்வு ஆண்டில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் மட்டும் காணப்படும். அதன்பின், நீரோட்டத்தினை பொருத்து ஒவ்வொரு இடங்களில் மணல் பரப்பு உருவாகும்

இதில் சுற்றுலா பயணிகள் சாலையில் இருந்து இறங்கி நடந்து சென்று புகைப்படங்கள் எடுத்து, கரையோரத்தில் குளித்தும் இயற்கையின் அழகினை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்

next

கொல்லி மலையின் அதிசயம் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி…