உடலுக்குக் குளிர்ச்சி தரும் கோரைப்பாய்... கலர் கலராய் தயாரிக்கும் காடையாம்பட்டி.!

தமிழ்நாட்டிலேயே அதிகமாகக் கோரைப்புற்கள் விளைவிக்கும் இடம் கரூர் மற்றும் முசிறி

கரூர் மாவட்டத்தில் காவிரி நீர் பாசனத்தில் நெல் பயிர்களைப் போல கோரைப்புற்களை விளைவித்து அறுவடை செய்கின்றனர்

பின்னர் பிற மாவட்டம், வெளிமாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. பின்னர் கோரைப்பாய் தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரைப்புற்களை வாங்கி செல்கின்றனர்

பின்னர் பத்து நாட்களுக்கு மேல் உலர்த்தி சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட கோரைப்புற்களை சாயப்பட்டறையில் வைத்து நிறம் (மஞ்சள், சிவப்பு , நீலம்) பூசப்படுகிறது

நிறம் பூசப்பட்ட பிறகு வெயிலில் உலர்த்தி பாய் தயாரிக்கக் கோரைப்புற்கள் தயார் செய்யப்படுகிறது. மினி ஜகாடு எனும் இயந்திரம் மூலம் நெய்யப்படுகிறது. மாதம் 2000 பாய் வீதம் தயாரிக்கப்படுகிறது

பின்பு தயாரிக்கப்பட்ட பாய்கள் அனைத்தும் தையல் முறை மூலம் பாயின் இருபுறமும் 1.5 அளவில் துணி வைத்துத் தைக்கப்படுகிறது. கோரைப்பாய் முழுவதுமாக தயார் செய்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது

இந்த நவீன காலத்தில் கோரைப்பாய்கள் அதிகம் உபயோகிக்கப்படுவதில்லை இருந்தாலும் இதனுடைய அருமை, பெருமை தெரிந்தவர்கள் உபயோகம் செய்கிறார்கள்

இந்த கோரைப்பாய் உபயோகித்தால் நமது உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். வெப்பக் காலங்களில் உடல் சூட்டைத் தணிக்கும் மற்றும் முதுகு தண்டுவட பிரச்சனை நாளடைவில் சரியாகும்

இத்தனை மருத்துவ குணம் அடங்கிய கோரைப்பாயினை அனைவரும் உபயோகித்து நலிவடைந்து வரும் கோரைப்பாய் தொழிலை மேம்படுத்தப்பட வேண்டும்

next

பாசிடிவ் எனர்ஜி கொடுக்கும் சாணத்திலான விதவிதமான குட்டி விநாயகர் சிலைகள்.!