தளர்ந்தது கட்டுப்பாடு... இந்த அணைக்கு அனைத்து நாட்களிலும் இனி செல்ல முடியும்.!

கேரள மாநிலம் இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே உள்ள செருதோணி அணை நேர் வடிவிலும் நவீன கட்டுமானத்தின் படி அமைக்கப்பட்டுள்ளது

கேரளாவில் ஜூலை மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை பெய்து இடுக்கி அணையில் தண்ணீர் நிரம்பி ரம்பியமாக காட்சியளிக்கும்

அணையை கண்டுகளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது மட்டும் கேரளா அனுமதி அளித்து வந்தன

இடுக்கி, செருதோணி அணைகளை தண்ணீர் திறக்கும் நாட்கள் தவிர அனைத்து நாட்களில் பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது

ஒரே நேரத்தில் 20 பேர் அனுமதிக்கப்படுவர். மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும்

கடும் மழைக்கான வானிலை முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படும் நாட்களிலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடுகள் விடுக்கும் நாட்களிலும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடிநீர் அடிப்படை வசதிகள் அரசின் மூலம் செய்து தரப்படும் என கூறப்பட்டுள்ளது

அணையை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதால் தேனி மாவட்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர்

next

இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் 5 இரவு நேர தவறுகள்.!