சர்க்கரை நோய் முதல் எடை குறைப்பு வரை.. பலன் தரும் பேரிக்காய்!

பேரிக்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

பேரிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

பேரிக்காய் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டுமே உள்ளது

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து வயிற்றை சுத்தப்படுத்த உதவுவதால் இது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது.. 

ஒரு பேரிக்காயில் சுமார் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பெக்டின் சத்தும் இதில் நிறைந்துள்ளது.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமல்லாமல் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

பேரிக்காய் தோலில் குர்செடின் (Qercetin)உள்ளது, இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும்.

பேரிக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதுமட்டுமின்றி சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பேரிக்காய் சாப்பிடலாம். இதில் குறைந்த கலோரி அதிக நார்ச்சத்து உள்ளது.

next

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!