செருப்பு போன்ற உடலமைப்பு கொண்டு கடினமான தோல் உடைய கிளாத்தி மீன் வகைகளில் ஒன்று தான் செருப்பு மீன் ஆகும்
தோல் கடினமாக இருப்பதால் இதனை ஆங்கிலேயத்தில் லெதர் ஜாக்கெட் மீன் என்று கூறப்படுகிறது. இதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்
இந்த மீனின் சுவை சீலா மற்றும் வாவல் மீனை போல் இருக்கும் என்றும், இதனால் தமிழகத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்
இதன் மையப்பகுதியில் முள் எலும்பு போன்று இருக்கும். ஒரு மீன் இரண்டு முதல் மூன்று கிலோ வரை வரையில் மட்டுமே இருக்கும்
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிகமாக வரத்து கிடைக்கும் என பாம்பன் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
இதிலுள்ள ஓமேகா- 3 ஊட்டச்சத்து முக்கிய மருத்துவ குணமாக உள்ளது. புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது, இயற்கையான ஆரோக்கிய ஊக்கியாக மாற்றுகிறது
உடலில் சோடியம் அளவை பூர்த்தி செய்யும். இரத்தில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க உதவுகிறது. கால்சியம் ஊட்டச்சத்து எலும்பினை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
இதில் உள்ள பாஸ்பரஸ் செல்லுலார் பாதிப்பை சரிசெய்து புரத உருவாக்கம் மற்றும் ஹார்மோன் சமநிலை மேம்படுத்தப்பட்டு செரிமானம் செய்ய உதவுகிறது
இந்த மீனை கொண்டு குழம்பு, கிரேவி, பொறியல், புட்டு ஆகியவை சமைத்து சாப்பிடலாம். இதன் தலைப்பகுதி குழம்பு வைத்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்குமாம்
தொப்பை கொழுப்பு குறைக்க வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டிய 10 உணவுகள் மற்றும் பானங்கள்.!