புரட்டாசி மாத பௌர்ணமி 2024 : சதுரகிரி பக்தர்களுக்கு வனத்துறை தந்த ஹேப்பி நியூஸ்.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்லும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால்,

பாதுகாப்பு கருதி மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் என குறிப்பிடப்பட்ட சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

அதிலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்

அந்த வகையில் புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோசத்தை முன்னிட்டு 15 ம் தேதி முதல் 18 ம் தேதி வரையிலான 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளது

இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையேறலாம்

எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு எடுத்து வரக்கூடாது என்றும் கூறியுள்ளது

மேலும் தற்போது மழை பெய்து வருவதால், அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

next

யூரிக் அமில அளவை குறைக்கும் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கும் காலைப் பழக்கங்கள்.!