வீக்கத்தைக் குறைக்க உதவும் இந்திய மசாலாப் பொருட்கள்!

மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை கொண்டாதால் இது கீல்வாதம் போன்றவற்றால் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியை குறைக்கிறது.

மஞ்சள்

இஞ்சியில் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி போன்ற பண்புகளைக் கொண்ட Gingerol அடங்கியுள்ளது. இது தசை வலி மற்றும் கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்க  உதவுகிறது.

இஞ்சி

கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட Eugenol உள்ளது. இது மூட்டு வலி, தசை வலி மற்றும் பல்வலி தொடர்பான வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

கிராம்பு

கருப்பு மிளகில் Piperine இருப்பதால் குர்குமின் போன்ற பிற அழற்சி எதிர்ப்பு சேர்மங்களை அதிகரிக்க உதவுகிறது.

கருப்பு மிளகு

ஏலக்காயில் cineole உள்ளது. இது இயற்கையான ஆண்டிசெப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மையின் மூலம் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதன்மூலம் சுவாச செயல்பாடுகள் மேம்படுகிறது.

ஏலக்காய்

இலவங்கப்பட்டையில் Cinnamaldehyde உள்ளதால், இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியது. இது உடலில் இருக்கும் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை

மல்லி விதையில் Linalool மற்றும் limonene போன்றவை அடங்கியுள்ளது. இவை வீக்கம் மற்றும் நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

மல்லி

சீரகத்தில் அடங்கியுள்ள Thymol மற்றும் phytosterols அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியது. இது உடலில் ஏற்படும் அழற்சி எதிர்வினைகளைக் குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.

சீரகம்

வெந்தயத்தில் இருக்கும் Saponins அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியது. இது கீல்வாதம் போன்ற நிலைகளில் ஏற்படும் வீக்கத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

வெந்தயம்

next

உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும் 5 ஆரோக்கிய பானங்கள்!