கொல்லிமலையில் இருந்து அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் கொல்லிமலையில் இருந்து சரியாக 7 கிமீ தூரத்தில் இந்த மாசிலா அருவி அமைந்துள்ளது.
ரம்மியமாக, கண்களுக்கு இதமாக காட்சியளிக்கும் வகையில் கொல்லிமலைக்கே மேலும் அழகு சேர்க்கிறது இந்த மாசிலா அருவி.
இந்த அருவில குடும்பத்தோட பாதுகாப்பாக குளிக்க முடியும். குறிப்பாக குழந்தைகள் இங்கு ரொம்பவே மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். இங்குபக்கதிலேயே ஒரு குழந்தைகள் பூங்காவும் உள்ளது
இந்த அருவில எவ்வளவு நேரம் வேணாலும் மன நிறைவோட எந்தவித தொந்தரவும், கூட்ட நெரிசலும் இல்லாமல் குளித்து மகிழலாம், குடும்பமாக வருவதற்கு ரொம்பவே சிறந்த இடம் இது.
இது மட்டுமில்லாம இந்த அருவியில் எண்ணெய் மசாஜ்செய்து கொண்டு பின்னர் குளிக்க முடியும். மூலிகை எண்ணெய் பயன்படுத்தி ஆயில் மசாஜ் பன்னிக்கலாம். சாஜ் பன்னிவிடுறதுக்கு இங்க ஆட்கள் இருக்காங்க
மூலிகை நிறைந்த அருவி நீர்ல, மூலிகை எண்ணெய்ல மசாஜ் பன்னிட்டு இந்த அருவில ஒரு குளியல் போட்ட அப்பறம் உடம்பும் மனதும் புத்துணர்ச்சியா உணரமுடியும்.
அதிக ஆர்பரிப்பில்லாமல் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து ஆனந்த குளியல் போடுறதுக்காகவே இங்க வரதா சொல்றாங்க.
இந்த அருவியில் குளிக்க ஒருத்தருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
குளிச்சிட்டு வரவங்க உடைகளை மாற்ற தனியாக உடை மாற்றிக்கொள்ளும் அறையும், வாகனங்கள் நிறுத்தவும் இங்கு வசதிகள் இருக்கு.. இந்த அருவிக்கு போற வழியில சூப் கடை, பழக் கடைகள்லாம் இருக்கு.