தேனி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பெருவாரியான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்
கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து உருவாகும் நீர்வரத்தின் மூலம் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
நீா்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அக்.12 அன்று தடை விதித்தனர்
கும்பக்கரை அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான கொடைக்கானல் மலை, வட்டக்கானல், வெள்ளக்கெவி, பாம்பாா்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு சீரான நீர்வரத்து அதிகரித்துள்ளது
கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத அளவிற்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது
இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது
தொடர்ந்து கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தடை நீடித்து வருகிறது
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் , நீர்வரத்து குறைந்த பிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கொழுப்பு கல்லீரலுக்கான கிரீன் டீ, காபி மற்றும் பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்.!