நாமக்கல் மண்டலம் தேசிய அளவில் கோழி முட்டை உற்பத்தியில் தனி சிறப்பு பெற்றுள்ளது. முட்டை உற்பத்தியில் இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது.
கடந்த 2 மாதங்களாக NECC (National Egg Coordination Committee) நிர்ணயித்த விலைக்கே கோழிப்பண்ணையாளர்கள் வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்தனர்.
சில வியாபாரிகள் மைனஸ் விலைக்கு முட்டை கொள்முதல் செய்து இந்த நடைமுறையை சீர்குலைத்து வருகின்றனர்
நாடு முழுவதும் சந்தைக்கு ஏற்ப NECC தினந்தோறும் முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. NECC விலைக்கு ஏற்ப பண்ணையாளர்கள் முட்டை விலையை விற்பனை செய்ய வேண்டும்.
மைனஸ் விலையை கட்டுப்படுத்த மண்டல அளவில் அமைக்கப்பட்டுள்ள 60 பேர் கொண்ட பண்ணையாளர்கள் குழு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் குறித்து இக்குழுவினரிடம் புகார் அளிக்கலாம். பக்ரீத் பண்டிகையையொட்டி வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது.
இனி வரும் காலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்து ஏற்றுமதி வழக்கமாக இருக்கும். இதனால் தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்தே காணப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
சத்துணவு முட்டை கொள்முதலுக்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளதாகவும் டெண்டர் எடுக்கும் நிறுவனத்துடன் பேசி NECC அறிவிக்கும் முட்டை விலையே ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது