தமிழ்த் தொண்டர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
முதுமைக் காலத்திலும் பொருள் வறுமையை எதிர்கொள்வதற்காகத் தமிழ்த் தொண்டர்களுக்கு மாதம் தோறும் ரூ.3500 மற்றும் மருத்துவத்திற்கு ரூ.500 என மாதம் ரூ.4,000 வழங்கப்படுகிறது
இதற்கு விண்ணப்பிக்க 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும்
தமிழ்ப்பணி ஆற்றிய விவரங்கள், 42 தமிழறிஞர்களிடமிருந்து பரிந்துரைச் சான்று நகல்கள், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல்கள் ஆகியவை தேவை
மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்
அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலிருந்து www.tamilvalarchithurai.tn.gov.in இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
31.10.2024-க்கு முன்பு நிரப்பிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்
காலையில் தோன்றும் இதய நோயின் 6 எச்சரிக்கை அறிகுறிகள்.!