பெண்களுக்குப் பிரத்தியேகமான பிங்க் பூங்கா... என்னென்ன வசதி இருக்கு தெரியுமா.?

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், பாளை ரோட்டிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில், நமக்கு நாமே திட்டம் 2023 - 2024 கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென்று பிரத்தியேகமான “தமிழ்ச்சாலை மகளிர் பூங்கா” என்னும் பிங்க் பூங்கா திறக்கப்பட்டுள்ளது

இந்த பிங்க் பூங்காவில் சிறப்பு அம்சமாகச் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய குளிர்சாதன வசதியுள்ள உடற்பயிற்சிக் கூடம்,

யோகா பயிற்சிக் கூடம், இறகுப் பந்து மைதானம், டென்னிஸ் மைதானம், ரோப் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

இந்த மகளிர் பூங்காவானது காலை 6 - 9 மணி மற்றும் மாலை 4 - 9 வரை செயல்படுகிறது

இதற்கு எந்த ஒரு முன்பதிவும் செய்ய வேண்டிய அவசியமில்லை, அனைவரும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்

மேலும், தினசரி வரும் நபர்களுக்கு மட்டும் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பெண்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமல், சவுகரியமானதாக இருக்க வேண்டும் என இந்த பூங்கா முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது

இந்த பூங்காவா சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து வயது பெண்களும் பயன்படுத்தும் வகையிலானதாக விளங்குகிறது

next

குளிர்காலத்தில் உங்கள் தினசரி உணவில் கீரை சேர்ப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!