திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட வீரன் வயல் கிராமத்தில் 03.11.2024 முதல் 16.11. 2024 வரை 14 நாட்கள் ஜாம்புவானோடை தர்கா பெரிய கந்தூரி விழா நடைபெறவிருக்கிறது
இந்த கந்தூரி திருவிழா வருடம் தோறும் இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
இந்த விழாவில் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஜாதி மத இன மற்றும் மொழி வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம்
ஜாம்புவானோடை தர்காவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா வரும் 12.11.2024 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெறவிருக்கிறது
அதனை முன்னிட்டு வரும் 13.11.2024 அன்று புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்
குறிப்பாக பொதுமக்கள் நலன் கருதி அரசு சார்ந்த அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அரசு கருவூலங்கள் சார்நிலை கருவூலங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
மேலும், இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் 07.12. 2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
பாறைக்கு நடுவே பாய்ந்தோடும் அருவிக்கரை… கன்னியாகுமரியின் பேமஸ் சூட்டிங் ஸ்பாட்.!