நாமக்கல்லில் இப்படி ஒரு கோயிலா.?  வழிபட்டால் பில்லி, சூனியம் விலகும் என ஐதீகம்.!

நாமக்கல்லில் இருந்து சேலம் போற வழில சரியா 39 கிமீ தொலைவில் மல்லூர் அருகே உள்ளது இந்த அல்லேரி முனியப்பன் கோவில். 

மல்லூர் வரைக்கும் பேருந்துலயும், அப்புறம் அங்கிருந்து ஆட்டோ பிடிச்சும் இந்த கோவிலுக்கு வர முடியும். இந்த அல்லேரி முனியப்பன் கோவில்ல ஆடு, கோழி, சேவல் பலியிடுதல் ரொம்ப விஷேசமா பார்க்கப்படுகிறது

இங்க அமாவாசை, வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலை தேடி வந்து வழிபட்டுட்டு இருக்காங்க.

பில்லி, சூனியம் பாதிப்பு விலகவும், குடும்ப பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படவும், வழக்குகளில் சிக்கல் இருந்தால் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் முனியப்பன் சுவாமியை வணங்கிச் செல்கின்றனர்

பக்தர்கள் வாங்கி வரும் எலுமிச்சை பழத்தை, சுவாமியின் மடியில் வைத்து, பூசாரிகள் பூஜை செய்து தருகின்றனர். வேண்டி வரும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் பொங்கல் வைத்து, 10க்கும் மேற்பட்ட ஆடு, 30க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

கோவில் வளாகத்தில் சமைத்து, உறவினர்கள். நண்பர்களை அழைத்து, விருந்து படைத்து வழிபட்டு வருவது இந்த கோவிலின் தனி சிறப்பு என்று சொல்லலாம்.

குளத்திற்கு நடுவில் பரிவார தெய்வங்கள்… தஞ்சையில் இப்படி ஒரு சிறப்புமிக்க கோவிலா.!