மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம்.!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர பிரம்மோட்சவம் கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.

இதன் ஒவ்வொரு தினமும் இரவு செங்கமலத்தாயார் வீதியுலா வந்தார். இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் & பக்தர்கள் பொதுமக்கள் பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

 யானை செங்கம்மா முன்னேவர தேர் கம்பீரமாக ஆடி அசைந்து வந்தது

செங்கமலத்தாயார் எந்த ஒரு உற்சவத்தின் போதும் கோவிலின் ராஜகோபுரத்தைவிட்டு வெளியில் செல்வது கிடையாது என்பதால் இவர் படிதாண்டா பத்தினி என பக்தர்களால் வணங்கப்படுகிறார்

எனவே செங்கமலதாயாரின் பிரமாண்ட தோரேட்டமும் கோயிலின் உள் பிரகாரத்திலேயே நடைபெறுவது சிறப்பாகும்

அதேபோல பாரம்பரியமாக 91வது ஆண்டாக தேரினை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். தேர் கோவிலின் 4 பிரகாரங்கள் வழியாக சுற்றி நிலைக்கு வந்தது

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செங்கமலதாயாரை தரிசனம் செய்தனர்.

குடிகாரர்களை திருத்தும் கோவில்.. எங்கு உள்ளது தெரியுமா.?