ஆரோக்கியமான முடிக்கு 10 tips 

உங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரோட்டீன்கள் சேர்ப்பது  தலைமுடிக்கு  வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொடுக்கும்.

1

தலைமுடியில் அதிகப்படியான வெப்பத்தை வெளியிடும் ஸ்ட்ரெய்ட்னர்கள், கர்லிங் அயர்ன்கள், ப்ளோ டிரையர்கள்  முடியை சேதப்படுத்தும். 

2

தலைமுடியை அதிக அழுத்தம் கொண்டு சீவுவதை முற்றிலுமாக தவிர்க்கவும், குறிப்பாக தலைமுடி ஈரமாக இருக்கும் பொழுது அதில் சீப்பு பயன்படுத்தக் கூடாது.

3

ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை உங்கள் முடியை ட்ரிம் செய்வது அதனை ஆரோக்கியமாக மட்டுமல்லாமல், முடி உதிர்வையும் தவிர்க்க உதவும்.

4

UV கதிர்கள் தலைமுடியை வலுவிழக்கச் செய்து உடைந்து விடும், வெளியே செல்லும் பொழுது தொப்பி அணிவது அல்லது ஹேர் ப்ராடக்டுகளை பயன்படுத்துவது அவசியம்.

5

சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை பயன்படுத்துவது உங்கள் தலைமுடிக்கும் மயிர்க்கால்களுக்கும் நல்லது.

6

வாரத்தில் ஒரு முறையாவது தலைமுடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது  தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம், போஷாக்கு அளித்து அதனை வலிமையாக மாற்றுவதன் மூலமாக உடைவதை  தடுக்கும்

7

இறுக்கமான போனிடைல்கள், பின்னல்கள்  பன் போன்றவற்றை அணிவது  தலைமுடிக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து உடைக்கக்கூடும், லூசான ஹேர் ஸ்டைல்கள் அல்லது முடியை சேதப்படுத்தாத ஹேர் ஸ்டைல்களை பின்பற்றவும்..

8

கலரிங், பர்மிங் அல்லது ரிலாக்ஸிங் போன்ற கெமிக்கல் டிரீட்மென்ட்கள் உங்கள் முடியை வலுவிழக்கச் செய்யலாம் ஆகவே இதை தவிர்த்து, இயற்கையான முறையில்  தலைமுடியை அழகாக்க முயற்சி செய்யுங்கள்.

9

தினமும் சரியான அளவு தண்ணீர் அருந்துவது உங்கள் உடல் மற்றும் தலைமுடிக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி தலைமுடி வறண்டு போவதையும், உடைந்து போவதையும் தடுக்க உதவும்.

10

நாம் ஏன் இருட்டில் தூங்க வேண்டும்.?

Arrow