இரவு நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் 15 உணவுகள் மற்றும் பானங்கள்.!

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்

இரவில் சிறந்த தூக்கத்தைப் பெற உதவும் 15 உணவுகள் மற்றும் பானங்கள் அடுத்தடுத்த ஸ்லைடில்...

முழு தானியங்கள்

1

முழு தானியங்கள் குறிப்பாக புல்கூர் மற்றும் பார்லி கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் உள்ளிட்ட தூக்கத்தை ஊக்குவிக்கும் பல கலவைகள் நிறைந்தவை

இஞ்சி டீ

2

இஞ்சி டீயை இரவில் குடித்தால் உணவுகள் எளிதில் செரிமானமாகி, செரிமான பிரச்சனைகளின்றி நல்ல ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்

ஓட்ஸ்

3

ஓட்ஸ் ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகும், இது மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது

பாதாம்

4

பாதாம் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும், இது தசைகளை தளர்த்தவும் தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது

கிவி

5

கிவியில் நிறைந்துள்ள செரோடோன் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். படுக்கைக்கு முன் கிவி சாப்பிடுவது தூக்கத்தின் தொடக்கத்தையும் கால அளவையும் மேம்படுத்த உதவும்

மீன்

6

மீன் வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும், இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த கலவையாகும்

புதினா டீ 

7

நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து குடித்தால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்

சூடான பால்

8

படுக்கைக்கு முன் சூடான பால் குடித்து வர உடல் நன்கு ரிலாக்ஸ் ஆகி ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்

புளிப்பு செர்ரி சாறு

9

புளிப்பு செர்ரிகள் மெலடோனின் இயற்கையான மூலமாகும். இது தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகும்

தேன்

10

வெதுவெதுப்பான பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இரவில் தூக்கம் சீக்கிரம் வருவதோடு, மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்

வாழைப்பழம்

11

வாழைப்பழத்தில் இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது

அஸ்வகந்தா

12

அஸ்வகந்தா என்பது ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அடாப்டோஜெனிக் மூலிகை ஆகும். இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் தளர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது

கெமோமில் டீ

13

இந்த மூலிகை தேநீர் உங்கள் மனதையும் உடலையும் ஓய்வெடுக்க உதவுகிறது. மேலும் இது தூக்கத்தை ஊக்குவிக்கிறது

பாதாம் பால்

14

பாலில் உள்ள வைட்டமின் ஈ இரவில் இனிமையான தூக்கத்தைப் பெற உதவும். அதிலும் பாதாம் பாலை டின்னர் முடிந்து குடித்து 1 மணிநேரம் கழித்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும்

மூலிகை டீ

15

கெமோமில், லாவெண்டர் மற்றும் வலேரியன் வேர் போன்ற சில மூலிகை டீகள் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து தூங்குவதை எளிதாக்கும் அமைதியான பண்புகளைக் கொண்டுள்ளன

இறைச்சி மட்டும் உண்பதால் ஆரோக்கியத்தில்  ஏற்படும் 7 தீமைகள்.!